யோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்!

யோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்!

யோகா ஆசிரியராக மாற நினைத்த ஆஸி.கிரிக்கெட் வீரர்!
Published on

கிரிக்கெட்டை விட்டுவிட்டு யோகா ஆசிரியராக மாறிவிடலாம் என நினைத்ததாக, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கேமருன் பேன்கிராஃப்ட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பேன்கிராஃப்ட், கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் ஆகியோர் சிக்கினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடையையும் பேன்கிராஃப்டுக்கு ஒன்பது மாத தடையையும் விதித்தது. இந்நிலையில் பேன்கிராஃப்டின் தடை விரைவில் முடிவடைய இருக்கிறது. இதையடுத்து அவர், பிக்பாஷ் போட்டியில் விளையாட இருக்கிறார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள பத்தியில், ‘’என்னை பலர் ஏமாற்றுக்காரன் என்று நினைத்திருப்பார்கள். இருந்தாலும் ஒவ்வொருவரையும் மதிக்கிறேன். நேசிக்கிறேன். ஒரு சின்ன தவறு பெரிய தண்டனை யில் கொண்டு வந்துவிட்டது. இப்போது நான் புதிய மனிதனாகிவிட்டேன். ஆரம்பத்தில் இதை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. சவாலாக இருந்தது. நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் அளித்தனர். பிறகு இந்த வருத்தத்தில் இருந்து, 

வாரத்துக்கு 35 கி.மீ ஓட்டம், தினமும் யோகா பயிற்சி என என்னை மாற்றிக்கொண்டேன். அது எனக்கு ஆறுதல் தந்தது. யோ கா, மனதின் உள்ளுள்ள காயத்தை நீக்கியது. நீ எப்படி உனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதை யோகா கற்றுக் கொடுத்தது. என்னை மாற்றியது யோகாதான். என் வாழ்க்கையில் இப்போது யோகா ஓர் அங்கமாகிவிட்டது.

ஒரு கட்டத்தில் கிரிக்கெட்டை விட்டுவிட்டு, யோகா ஆசிரியராக மாறிவிடலாம் என நினைத்தேன். பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரும் ஆலோசகர் ஆடம் வோக்ஸ் ஆகியோரின் ஆலோசனையும் படி, கிரிக்கெட்டுக்கு திரும்ப இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com