\
17 பந்துகளில் அரை சதம் : பந்துகளை பறக்கவிட்ட பூரன்..!

17 பந்துகளில் அரை சதம் : பந்துகளை பறக்கவிட்ட பூரன்..!

17 பந்துகளில் அரை சதம் : பந்துகளை பறக்கவிட்ட பூரன்..!
Published on

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடி அரை சதத்தை பூரன் அடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 22வது லீக் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 201 ரன்களை குவித்தது. அதை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. பஞ்சாப் அணியில் 2 விக்கெட்டுகள் போன பின்னர் களமிறங்கிய பூரான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 8 ஓவர்கள் முடியும்போது 13 பந்துகளுக்கு 28 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

பின்னர் அப்துல் சமாத் வீசிய 9வது ஓவரில் பந்துகளை பறக்கவிட்ட பூரான் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என மொத்தம் 28 ரன்களை அந்த ஓவரில் குவித்தார். அத்துடன் 17 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் விரைவாக அடிக்கப்பட்ட அரை சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com