'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..!

'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..!
'வொய்டு' கொடுக்காத நடுவருக்கு எதிர்ப்பு காட்டிய பொல்லார்டுக்கு அபராதம்..!

ஐபிஎல் இறுதிப்போட்டியின் போது, களத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் செயல்பட்ட மும்பை இண்டியன்ஸ் அணி வீரர் பொல்லார்டு-க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக கோப்பையை வென்றது மும்பை அணி. மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

நேற்றைய போட்டியின் போது மும்பை அணியின் வீரர் பொலார்ட் 41 (25) ரன்கள் எடுத்து அதிரடியை வெளிப்படுத்தினார். அப்போது கடைசி ஓவரில் பிரேவோ வீசிய பந்திற்கு வொய்டு கொடுக்காததால், பேட்டிங் செய்த பொல்லார்டு அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், பேட்டை மேலே தூக்கி வீசினார். அடுத்த பந்தை பிரேவோ வீசும் முன்பே, வேண்டுமென்றே சற்று தள்ளிச் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கள நடுவர்கள் பொல்லார்டை எச்சரித்தனர். 

இந்நிலையில் களத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்திய மும்பை வீரர் பொல்லார்ட், ஒழுங்கீனமாக செயல்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான ஊதியத்தில் 2‌5 சதவிகிதம் அபாராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com