மும்பை இந்தியன்ஸ் கேப்டன்களாக பொல்லார்ட் & ரஷீத் கான் நியமனம்! எந்த லீக்கில் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் கேப்டன்களாக பொல்லார்ட் & ரஷீத் கான் நியமனம்! எந்த லீக்கில் தெரியுமா?
மும்பை இந்தியன்ஸ் கேப்டன்களாக பொல்லார்ட் & ரஷீத் கான் நியமனம்! எந்த லீக்கில் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிகளான எம்ஐ எமிரேட்ஸ் மற்றும் எம்ஐ கேப் டவுன் இரண்டிற்கும் பொல்லார்டு மற்றும் ரஷீத் கானை கேப்டன்களாக நிர்ணயித்துள்ளது ரிலையன்ஸின் எம்ஐ குளோபல் நிர்வாகம்.

இண்டர்நேசனல் லீக் எனப்படும் ஐஎல் டி20 தொடரானது அபுதாபியில் நடைபெறவிருக்கும் டி20 தொடராகும், அந்த தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியான எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு தான் வெஸ்ட் இண்டிஸ் முன்னாள் வீரரான அதிரடி ஆல்ரவுண்டர் பொல்லார்டு கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சவுத் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் எஸ்ஏ டி20 தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸின் எம்ஐ கேப் டவுன் அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ரஷீத் கான் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

MI கேப் டவுன் அணியானது ஜனவரி 10 ஆம் தேதி கேப் டவுனில் உள்ள அவர்களின் சொந்த மைதானத்தில் SA20 இன் முதல் ஆட்டத்தை பார்ல் ராயல்ஸுக்கு எதிராக விளையாடவிருக்கிறது. இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் மும்பை இந்தியன்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சரை போட்டிக்கான வைல்டு கார்டு மூலம் கையொப்பமிடுவதாக அறிவித்துள்ளனர். மற்றும் எம்ஐ கேப் டவுன் அணியில் இங்கிலாந்தின் சாம் கரன், லிவிங்க்ஸ்டன், ஒல்லி ஸ்டோன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் ரபாடா, வேண்டர் டஸ்ஸன், ப்ரேவிஸ் பங்குபெற்று ஆட உள்ளனர்.

MI எமிரேட்ஸ் அணியில், பிராவோ, நிக்கோலஸ் பூரன், ட்ரெண்ட் போல்ட், இம்ரான் தாஹீர் போன்ற அதிரடி வீரர்கள் பங்குபெற்றுள்ளனர்.

முதன்முதலாக நடத்தப்படும் இரண்டு தொடர்களின் முதல் சீசன், வரும் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் நடத்தப்படவிருக்கிறது. மார்ச் மாதம் ஐபிஎல் தொடங்கவிருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த இரண்டு டி20தொடர்களும் நடத்தப்படவிருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com