ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண விவரம்: பிசிசிஐ-க்கு போலீஸ் கடிதம்!

ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண விவரம்: பிசிசிஐ-க்கு போலீஸ் கடிதம்!

ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயண விவரம்: பிசிசிஐ-க்கு போலீஸ் கடிதம்!
Published on

கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களைத் தருமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கொல்கத்தா போலீசார் கேட்டுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி. இவர், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் அவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் அவர் மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் பரபரப்பான புகார் அளித்தார். 

இதையடுத்து ‌ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் அவருடன் சமாதானமாக செல்ல ஷமி குடும்பத்தின் தரப்பில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டார் ஷமியின் மனைவி. ’மற்ற பெண்களுடன் ‌ஷமிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் உள்ள செல்போன் என்னிடம் இருக்கிறது. அந்த ஆதாரம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால் இந்நேரம் அவர் விவாகரத்து வாங்கியிருப்பார்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்துவரும் கொல்கத்தா போலீசார், முகமது ஷமியின் தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய போது, முகமது ஷமி துபாயில் பாகிஸ்தான் பெண்ணை சந்தித்ததாகவும் பாகிஸ்தான் பெண் ஷமிக்கு அடிக்கடி போன் செய்வார் என்றும் அந்தப் பெண்ணிடம் கொண்ட தொடர்பு காரணமாக, ஷமி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது எனவும் ஹசின் புகார் கூறியிருந்தார். அதோடு இந்திய கிரிக்கெட் அணி, இந்தியா திரும்பியபோது அவர்களுடன் ஷமி வரவில்லை என்றும் ஒரு நாள் கழித்துதான் அவர் இந்தியா வந்தார் என்றும் இதில் சந்தேகம் இருப்பதாகவும் ஹசின் கூறியிருந்தார். இதையடுத்து ஷமியின் ஃபோன் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ஷமியின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் தொடர்பான விவரங்களை தருமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கொல்கத்தா புலனாய்வு பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.

‘நாட்டுக்கு வெளியே ஷமியின் செயல்பாடு பற்றி அறிய பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளோம்’ என்று பிரிவு போலீஸ் அதிகாரி பிரவின் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com