விளையாட்டு
இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி
இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கும் நிலையில், 125 கோடி மக்களுடன் இணைந்து வாழ்த்துத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கேப்டன் மிதாலி ராஜ் உள்பட இந்திய மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனையின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் பலம் குறித்தும் பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துவருகிறது.