இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து... பிசிசிஐ ரூ. 5 கோடி போனஸ்

இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து... பிசிசிஐ ரூ. 5 கோடி போனஸ்
இந்திய அணி வெற்றி - பிரதமர் மோடி வாழ்த்து... பிசிசிஐ ரூ. 5 கோடி போனஸ்

ஆஸ்திரேலிய தொடரை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ 5 கோடி போனஸ் அறிவித்திருக்கிறது.

இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை காபா மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 1 என இந்திய அணி வென்று காட்டியுள்ளது.

கடந்த 1988 முதலே இந்த மைதானத்தில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளை ஆஸ்திரேலியா வென்றிருந்தது. காபா டெஸ்ட் போட்டி டிராவானால் கூட அது ஆஸ்திரேலியாவின் தோல்வி என சொல்லி இருந்தார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். ஆனால் மெல்பேர்ன், காபா என இரண்டு மைதானங்களில் இந்தியா வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணியின் 32 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளது.

இந்த அசத்தலான வெற்றியை பலரும் பாராட்டிவரும் நிலையில் பிரதமர் மோடி இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார்.

அதில், ‘’ஆஸ்திரேலியாவின் இந்திய அணியின் வெற்றிகுறித்து நாம் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைகிறோம். அவர்களின் அயராத உழைப்பும், பேரார்வமும் போட்டி முழுவதும் வெளிப்பட்டது. வெற்றிதான் அவர்களுடைய இலக்காக இருந்ததால் அதற்கான திடமான மன உறுதியும் வெளிப்பட்டது. எதிர்காலத்திலும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’’ என்று வாழ்த்தியிருக்கிறார்.

The @BCCI has announced INR 5 Crore as team bonus. These are special moments for India Cricket. An outstanding display of character and skill #TeamIndia #AUSvIND #Gabba
— Jay Shah (@JayShah) January 19, 2021

இதற்கிடையே, இந்திய அணியின் சிறப்பான விளையாட்டை பாராட்டி, பிசிசிஐ போனஸாக ரூ. 5 கோடி இந்திய அணிக்கு வழங்குவதாக தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com