“அடுத்த போட்டிக்கு டெட் பிட்ச் வேண்டாமே ப்ளீஸ்”- முன்னாள் பாக். கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக்

“அடுத்த போட்டிக்கு டெட் பிட்ச் வேண்டாமே ப்ளீஸ்”- முன்னாள் பாக். கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக்
“அடுத்த போட்டிக்கு டெட் பிட்ச் வேண்டாமே ப்ளீஸ்”- முன்னாள் பாக். கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை செய்து வருகின்றன. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த போட்டிக்கு இது மாதிரியான டெட் பிட்ச்சை தயார் செய்ய வேண்டாம் என ஆடுகள பரமரிப்பாளரை கேட்டுக் கொண்டுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹாக். 

ராவல்பிண்டி ஆடுகளம் குறித்து போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே விமர்சித்திருந்தன ஆஸ்திரேலிய ஊடகங்கள். இந்த நிலையில் ஆடுகளம் குறித்து தனது கருத்தை சொல்லியுள்ளார் இன்சமாம். இந்த போட்டியில் இரு அணிகளும் இணைந்து 14 விக்கெட்டுகளை மட்டும் தான் கைப்பற்றியிருந்தன. 

“இந்த டெஸ்ட் போட்டியில் விக்கெட் கண்டீஷன் குறித்து அதிக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ‘இது என்ன மாதிரியான ஆடுகளம்’ என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அடுத்த டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் ஆட்டத்தில் முடிவை எட்டும் வகையில் இருக்கும் என நான் நம்புகிறேன். 

இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டியில் சமன் என்பது அரிதினும் அரிதான விஷயமாக மாறியுள்ளது. ஆட்டத்தின் முதல் நாளிலேயே ஆட்டம் டிராவில் தான் முடியும் என்ற மனநிலையை கடைசியாக நான் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு சரியாக நினைவில்லை. அதனால் அடுத்த போட்டியில் சவால் கொடுக்கும் வகையிலான ஆடுகளத்தை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைப்பதில் தப்பு ஏதுமில்லை. ஏனெனில் தொடரை ஹோஸ்ட் செய்யும் அணி என்ற சாதகம் நமக்கு உள்ளது. ஆனால் இது மாதிரியான டெட் பிட்ச் வேண்டாமே ப்ளீஸ்” என தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார் இன்சமாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com