தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!

தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!

தோனி மாதிரியே கோலியும்... புல்லரிக்கும் புஜாரா!
Published on

மகேந்திர சிங் தோனி மாதிரியே, இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் விராத் கோலியும் செயல்படுகிறார் என்று கிரிக்கெட் வீரர் புஜாரா கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். இதுதான் என் பேட்டிங் ஸ்டைலை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏனென்றால் அந்த நாட்டு மைதானங்களில் டெக்னிக்கலான விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். ஒரு கிரிக்கெட்டராக, உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளவும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடவும் கவுன்டி கிரிக்கெட் உதவும். இப்போது சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினும் விளையாட இருக்கிறார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஒவ்வொரு போட்டியையும் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் இருப்பார். அவரைப் போன்றே இப்போது விராத் கோலியும் இருக்கிறார். அணி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் இருவரிடமும் மாற்றமில்லை. ஆனால் அவர்கள் கற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் அணுகுமுறையில் மாற்றங்கள் இருக்கலாம். இந்திய டெஸ்ட் அணி இப்போது வலுவாக இருக்கிறது’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com