"இரண்டாம் உலகப்போரும்.. டான் பிராட்மேனும்..’’- ஊக்கப்படுத்திய சச்சினின் பதிவு..!

"இரண்டாம் உலகப்போரும்.. டான் பிராட்மேனும்..’’- ஊக்கப்படுத்திய சச்சினின் பதிவு..!
"இரண்டாம் உலகப்போரும்.. டான் பிராட்மேனும்..’’- ஊக்கப்படுத்திய  சச்சினின் பதிவு..!

இரண்டாம் உலகப் போரின்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை அந்தக் காலக்கட்டத்தில் டான் பிராட்மேன் காத்திருந்து மீண்டும் விளையாடி சாதித்தார் என தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.

கொரோனா பாதிப்பு காரணமாக உலகெங்கிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் தடைப்பட்டு இருக்கிறது. பல விளையாட்டு வீரர்கள் போட்டிகள் ஏதுமின்றி பல மாதங்களாக வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் டான் பிராட்மேன் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் வகையிலும் முடங்கியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

அதில் "சர் டான் பிராட்மேன் இரண்டாம் உலகப் போரின் காரணமாக பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருக்க நேரிட்டது. ஆனாலும் இறுதியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆவரேஜ் எடுத்துள்ள பேட்ஸ்மேனாக அவர் திகழ்ந்தார். இப்போது பல மாதங்களாக விளையாட்டு வீரர்கள் விளையாட்டை தொடர முடியாமல் இருக்கிறார்கள். அவர்கள் டான் பிராட்மேனை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என பதிவிட்டிருந்தார் சச்சின்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் விரிவாக பேசிய சச்சின் "இந்தியாவில் 1994 மார்ச் தொடங்கி 1995 அக்டோபர் வரை ஏறக்குறைய 18 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஏதும் நடைபெறவில்லை. 1990 காலக் கட்டங்களில் இது சர்வசாதாரணமாகவே நிகழ்ந்தது. பின்பு கோடைக் காலத்தில் இலங்கைக்கு விளையாட சென்றால் அங்கு போட்டிகளை மழைக்காரணமாக ரத்தாகும். அப்போது போட்டிகளே இருக்காது. இந்தியாவில் கிரிக்கெட் சில மாதங்கள் இல்லாமல் இருப்பது சாதாரணமான விஷயமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com