வீரர்கள் ஊதிய விவகாரம்: நடுநிலையாளரைத் தேடும் ஆஸி. கிரிக்கெட் வாரியம்

வீரர்கள் ஊதிய விவகாரம்: நடுநிலையாளரைத் தேடும் ஆஸி. கிரிக்கெட் வாரியம்
வீரர்கள் ஊதிய விவகாரம்: நடுநிலையாளரைத் தேடும் ஆஸி. கிரிக்கெட் வாரியம்

வீரர்களின் ஊதியம் தொடர்பான பிரச்னையை தீர்க்க நடுநிலையாளர் ஒருவரை நாடும் முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் இடையிலான ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஆஸ்திரேலிய வீரர்கள் சுமார் 230க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த பிரச்னையைத் தீர்ப்பது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால், அடுத்த மாதம் நடைபெற உள்ள வங்கதேசம்,இந்திய அணிகளுக்கெதிரான தொடர்கள் மற்றும் நவம்பரில் நடைபெறும் ஆஷஸ் டெஸ்தொடர் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. 

இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயலதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சதர்லேண்ட், வீரர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பிரச்னையை விரைவில் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், ஊதிய ஒப்பந்த பிரச்னையில் தீர்வு எட்டப்படவில்லை என்றால், குறுகியகால ஒப்பந்தம் அடிப்படையில் வங்கதேசம் மற்றும் இந்திய தொடர்களுக்கு அனுப்பி வைக்க கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். அதேநேரம் இருதரப்பிலும் கருத்தொற்றுமை ஏற்படாதபட்சத்தில், நடுநிலையாளர் ஒருவர் மூலம் இந்த பிரச்னையை பேசித் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com