”சூர்யகுமார் போன்ற வீரர்கள் 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள்” - கபில் தேவ் புகழாரம்

”சூர்யகுமார் போன்ற வீரர்கள் 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள்” - கபில் தேவ் புகழாரம்
”சூர்யகுமார் போன்ற வீரர்கள் 100 ஆண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள்” - கபில் தேவ் புகழாரம்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்ய குமார் யாதவை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில்தேவ் புகழ்ந்து தள்ளியுள்ளார். 

இந்தியாவின் கைகளில் முதல்முறை உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டனும், இந்திய அணியின் காலத்திற்கும் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வீரருமான கபில்தேவ், சூர்யகுமாருக்கு பாராட்டு மழைகளை பொழிந்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ், 51 பந்துகளில் 9 சிக்சரகள், 7 பவுண்டரிகளுடன் 112 ரன்களை குவித்து, டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். சூர்யகுமாரின் அபாரமான பேட்டிங்கால் இலங்கைக்கு எதிரான 3ஆவது போட்டியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது இந்திய அணி.

இந்நிலையில் ஏபிபி நியூஸிடம் பேசிய முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் கபில்தேவ், ”சூர்யகுமார் யாதவின் அந்த ஆட்டத்தைப் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை, மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் அடிக்கும் அவருடைய பேட்டிங் ஆற்றலானது, பந்துவீச்சாளர்களை கடினமான இடத்திற்கு தள்ளியது” என்று புகழ்ந்து கூறினார்.

மேலும் சூர்யகுமார் பேட்டிங் குறித்து பேசியிருக்கும் கபில்தேவ், ”அவருடைய இந்த பேட்டிங்கை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை. நீங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களை பார்க்கும் போது, இவர்களைப் போன்ற ஒரு வீரர் மீண்டும் வர முடியுமா என்று உங்களையே கன்வின்ஸ் செய்து கொள்வீர்கள். ஆனால், அந்த வரிசையில் அடுத்தவீரராக வந்து நிற்கிறார் சூர்யகுமார். அப்படியான ஒரு கிரிக்கெட்டை அவர் விளையாடுகிறார். இந்தியாவில் அவ்வளவு திறமைகள் உள்ளன.

குறிப்பாக ஃபைன் லெக்கிற்கு மேல் அவரடிக்கும் லேப் ஷாட்கள் பற்றி என்ன சொல்வது, ஒரு பந்துவீச்சாளர் வேறு எப்படி தான் பந்துவீச முடியும். அவருக்கு ஃபுல் லெந்த் பந்துகளை வீசுவதற்கு பந்துவீச்சாளர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால், அவரால் உங்களை மிட்-ஆனில் அடிக்க முடிகிறது மற்றும் சிக்ஸருக்கும் பறக்கவிட முடிகிறது. அவர் தொடர்ந்து லைன் மற்றும் லெந்துகளில் பந்துவீச்சாளர்களை பயமுறுத்துகிறார், பந்துவீச்சாளர்களின் மனநிலையோடு விளையாடுகிறார், அது பந்து வீச்சாளர்களை கடினமான நிலைக்கு தள்ளுகிறது” என்று புகழ்ந்து தள்ளினார்.

மேலும், “பேட்ஸ்மேன்களிடம் இந்தமாதிரியான தாக்குதல்களை பார்ப்பது அரிது. ஏபி டி வில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் போன்ற அற்புதமான வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு சிலரால் மட்டும் தான் சூர்யகுமாரை போல் கிளீன் ஷாட்களை ஆடமுடியும். அவருக்கு ஹாட்ஸ் ஆஃப்'' என்றார் கபில்தேவ்.

அத்துடன், ”டென்னிஸில், எதிர் தரப்பில் இருக்கும் வீரர் சர்வீஸ் அடிக்கும் போது நீங்கள் பந்து எந்த இடத்தில் லேண்டாக போகிறது என்பதை, குறிப்பாக வலது பக்கமா அல்லது இடதுபுறமாக இறங்குமா என்பதை கணிக்க முயற்சிப்பீர்கள் இல்லையா. அப்படியே பந்துவீசும் போது பந்து வீச்சாளர் எங்கு வீசப் போகிறார் என்பதை அவர் முன்கூட்டியே தீர்மானிக்கிறார். சில வீரர்களுக்கே இவ்வாறு விளையாடுவதற்கு, கடவுள் கொடுத்த திறமை உள்ளது. இது எளிதானது அல்ல. இவரைப் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை தான் வருவார்கள்” என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் கபில்தேவ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com