போராடி தோற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்

போராடி தோற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்

போராடி தோற்ற இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன்
Published on

துருக்கியின் அன்டால்யா நகரில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், சைப்ரஸின் மார்க்கஸ் பாக்தாடிஸிடம் போராடி தோற்றார். 

பாக்தாடிஸுக்கு எதிரான போட்டியின் முதல் சுற்றை 7-6 என்ற கணக்கில் வென்ற ராம்குமார், இரண்டாவது சுற்றை 3-6 என்ற கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் கடுமையாகப் போராடிய அவர், 6-7 என்ற செட்டில் தோல்வியடைந்தார். சர்வதேச ஏடிபி தரநிலையில் 222ஆவது இடத்தில் உள்ள ராம்குமார், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.   
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com