விடை பெற்றார் மோர்னே மோர்கல்!

விடை பெற்றார் மோர்னே மோர்கல்!
விடை பெற்றார் மோர்னே மோர்கல்!

தென் ஆப்பிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் சர்வதேச போட்டியில் இருந்து விடை பெற்றார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பந்துவீச்சாளார்களில் ஒருவர் மோர்னே மோர்கல். பவுன்சர் பந்துகளை துள்ளியாமாக வீச கூடியவரான இவர் பலமுறை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து உள்ளார். 2006 ஆம் ஆண்டில் அறிமுகமான இவர்  86 டெஸ்டில் 160 இன்னிங்சில் விளையாடி 309 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் 8 முறை ஐந்து விக்கெட்டுகள் மேல் எடுத்துள்ளார். 117 ஒரு நாள் போட்டியில் 188 விக்கெட்டுகளும், 20 ஓவர் போட்டியில் 44 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் ஆஸ்திரேலியா  அணியுடன் டெஸ்ட் போட்டிதான் தன்னுடைய இறுதி போட்டி என ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில் இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மோர்கல் சிறப்பாக பந்துவீசிய 9 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யபட்டார். இந்த நிலையில் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முடிந்த இறுதி டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸ்சில் ஒரு விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் சார்பாக அவருக்கு நினைவு பரிசும் வழங்கி கெளரவப்படுத்தபட்டார். சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றுள்ள மேர்கலுக்கு முக்கிய வீரர்கள் பலரும் வாழ்த்தி ட்விட்டரில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.    

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com