“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ?” - அம்பயர் விளக்கம்

“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ?” - அம்பயர் விளக்கம்

“பிட்ச் ரெடிதான்.. ஆனாலும் தாமதம் ஏன் ?” - அம்பயர் விளக்கம்
Published on

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி தாமதம் குறித்து போட்டியின் நடுவர் விளக்கமளித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் 18வது லீக் போட்டி இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இதுவரை 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. ஒரு போட்டி மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா ? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள போட்டியின் நடுவர், “மைதானம் ரெடியாகதான் உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் குறைய நேரம் எடுக்கிறது. எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இது தொடரின் தொடக்க நிலைதான். 

அதனால் நாங்கள் அனைத்தையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இன்று வெயிலையோ, சூரியனையோ பார்க்க முடியவில்லை. அதனால் களம் காய்ந்து போவதற்கு நேரம் ஆகிறது. அதற்காகதான் காத்துக்கொண்டிருக்கிறோம். ஈரத்துடனே விளையாட முடியாது, ஏனென்றால் இது சர்வதேச போட்டி. சில பகுதிகள் மட்டும்தான் மிகுந்த ஈரத்துடன் இருக்கிறது. எனவே போட்டியை 75 நிமிடங்கள் குறைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com