மைதானத்தில் ஹாயாக படுத்திருந்த ரிஷப் பண்ட் - வைரலாகும் போட்டோ
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் ஹாயாக படுத்திருந்த ரிஷப் பண்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இப்போட்டியில், புதிய முயற்சியாக ரோகித் சர்மாவுடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக இறக்கிவிடப்பட்டார். ஆனால் 18 ரன்களில் தேவையில்லாத 'ஷாட்' ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார் ரிஷப் பண்ட்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே ஹாயாக படுத்து கிடந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதை மீம்ஸ் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிக்க: க்ளிக் ஆன பிரசித், ஆகாத பண்ட் - தொடரும் இந்தியாவின் பரிசோதனை முயற்சிகள்