ரசிகர்களின் வாழ்த்து மழையில் சாஹல் - தனஸ்ரீ தம்பதி: திருமண புகைப்படங்கள்!

ரசிகர்களின் வாழ்த்து மழையில் சாஹல் - தனஸ்ரீ தம்பதி: திருமண புகைப்படங்கள்!
ரசிகர்களின் வாழ்த்து மழையில் சாஹல் - தனஸ்ரீ தம்பதி: திருமண புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல்-நடன இயக்குநர் தனஸ்ரீ தம்பதிக்கு நேற்று திருமணம் நடந்தது. அது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல்-நடன இயக்குநர் தனஸ்ரீ தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அதற்கு பின் ஐபிஎல் போட்டிகள் நடந்தன. ஐபிஎல் போட்டிகளை காண தனஸ்ரீ துபாய்க்கே சென்றார். அங்கு எடுக்கப்பட்ட சாஹல்-தனஸ்ரீ புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், இந்த தம்பதி தற்போது திருமண வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளது. திருமணம் தொடர்பான முன்னறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. நெருக்கமானவர்களை கொண்டு சாஹல் - தனஸ்ரீ தம்பதிக்கு நேற்று திருமணம் நடந்தேறியது.

நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்துகொண்டனர். திருமண புகைப்படங்களை சாஹலும், தனஸ்ரீயும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com