டிரெஸிங் ரூமுக்குள் எட்டிப்பார்க்கும் கோலி...வைரலாகும் புகைப்படம்
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் போட்டியின்போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி டிரெஸிங் ரூமுக்குள் எட்டிப்பார்ப்பது போன்ற புகைப்படம் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி தோல்விக்குப் பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 39.2 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழையால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்த போட்டியின்போது டிரெஸிங் ரூமுக்குள் விராத் கோலி எட்டிப்பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை பதிவிட்டு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் ஒரு நெட்டிசன், பாகிஸ்தானின் முகமது அமீர் மைதானத்தில் இருக்கிறாரா என்று ட்ரெஸிங் ரூமில் இருக்கும் வீரர்களிடம் கோலி கேட்பதாகக் கலாய்த்துள்ளார். பாண்ட்யா ஒன்றும் சொல்ல மாட்டார் என்று ஜடேஜாவை கோலி அழைப்பதாகவும், கும்ப்ளே வருகிறார், டிவியை ஆஃப் செய்யுங்கள் என்று சக வீரர்களிடம் கோலி கூறுவதாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்ய வேண்டும், தோனி இருக்கிறாரா என்று கோலி கேட்பதாகவும் ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன், அனுஷ்கா ரெடியாயிட்டியா, இல்லை நான் தனியா கிளம்பிப் போகவா என்று விராத் கோலி கேட்பதாகக் கலாய்த்துள்ளார்.