புதுசா கிடைச்ச மீம் டெம்பிளேட்..  வைரலான கோலி, ரோகித் சர்மாவின் போட்டோ!

புதுசா கிடைச்ச மீம் டெம்பிளேட்.. வைரலான கோலி, ரோகித் சர்மாவின் போட்டோ!

புதுசா கிடைச்ச மீம் டெம்பிளேட்.. வைரலான கோலி, ரோகித் சர்மாவின் போட்டோ!
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தததோடு முதல் இன்னிங்ஸில் டாமினேட் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் சதம் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையியல் நேற்றைய ஆட்டத்தின் போது ஃபீல்டிங் பணியை கவனித்து வந்த கேப்டன் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. இருவரும் கேமிராவை பார்த்து வித்தியாசமான லுக் விட்டுள்ளது மீம் கிரியேட்டர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் காட்டுத் தீனியாக அமைந்துள்ளது.

அந்த படத்தை வைத்து ட்விட்டர் மாதிரியான சமூக வலைத்தளங்களில் ‘மானே, தேனே’ என மனம் போன போக்கில் கேப்ஷன் போட்டு கொண்டாடியும், TROLL செய்தும் வருகின்றனர். அதில் சில…

-வகுப்பிற்கு புதிய பெண் மாணவி வந்தாள்…

-பிள்ளைகள் போனை பார்த்து அசடு வழிய சிரிக்கும் போது பெற்றோர்களின் ரியாக்ஷன்…

-தங்களது நண்பன் அவனது கிரஷுடன் ஊர் சுற்றும் போது சிங்கிள் பசங்களின் ரியாக்ஷன்…

-ரோகித்தும், கோலியும் ரூட் முதல் நாளன்று சதம் அடித்த போது…

-ஆங்கில ஆசிரியர் தங்களை கடக்கும் போது உடற்பயிற்சி மற்றும் கணித வாத்தியாரின் பார்வை…

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com