எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்று அறிவேன் – தோனியின் மனைவி சாக்‌ஷி

எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்று அறிவேன் – தோனியின் மனைவி சாக்‌ஷி

எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்று அறிவேன் – தோனியின் மனைவி சாக்‌ஷி
Published on

நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று தோனியின் மனைவி சாக்‌ஷி கூறியுள்ளார்

இது குறித்து பதிவிட்டுள்ள அவர் “ நீங்கள் சாதித்ததைப் பற்றி நீங்கள் பெருமைப்பட வேண்டும். விளையாட்டுக்கு உங்களது மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு வாழ்த்துக்கள். சாதனைகளுக்குரிய நபராக இருக்கும் உங்களை குறித்து நான் பெருமைப்படுகிறேன். மிகத்தீவிரமாக விரும்பிய இவ்விளையாட்டிலிருந்து விடைபெறும்போது நீங்கள் எவ்வளவு கண்ணீரை கட்டுப்படுத்தி இருப்பீர்கள் என்று அறிவேன். உங்களுடைய ஆரோக்கியம், மகிழ்ச்சியை விரும்புகிறேன், இனி பல அற்புதமான விஷயங்கள் முன்னே உள்ளது” என்று கூறியுள்ள அவர்

"நீங்கள் சொன்னதை மக்கள் மறந்துவிடுவார்கள், நீங்கள் செய்ததை மக்கள் மறந்துவிடுவார்கள், ஆனால் நீங்கள் உருவாக்கிய உணர்வுகளை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்." என்ற மாயா ஏஞ்சலோவின் வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com