இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரை கைப்பற்றியது.வெற்றி பெற்ற உற்சாகத்தில் இந்திய வீரர்கள் தாயகம் திரும்பினர். விமான நிலையத்தில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு பயணமாயினர். அதில் ஒரு இளம் வீரர் மட்டும் விமான நிலையத்தில் இருந்து நேராக அந்தேரி ரயில்நிலையத்திற்கு வந்தார். அங்கு டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுத்தவர் மும்பை லோக்கல் ரயிலில் பால்கருக்கு பயணமானர்.
பலருக்கு முதலில் அவரை எங்கோ பார்த்து போல் தோன்றியது. சிலர் இவர் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் சர்துல் தாக்கூர் என அடையாளம் கண்டுகொண்டனர்.சிலர் சந்தேகத்துடன் கூகுளில் இவரைப்பற்றி தேடி உறுதி செய்து கொண்டனர். பின்னர் என்ன? அவர் இறங்கும் வரை செல்ஃபி தான். சர்துல் தாக்கூர் 2015ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக மூன்று ஒருநாள் மற்றும் 2டி 20 போடிகளில் விளையாடி உள்ளார்.
இதுகுறித்து பேசிய சர்துல் தாக்கூர், தற்போது என்னை பார்ப்பவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் எப்படி இருந்தேன் என்று ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். எங்களுடன் பயணம் செய்யும் பையன் இப்போது இந்தியாவில் விளையாடி வருகிறான் என்று அவர்கள் சொல்கிறார்கள். தென்னாப்பிரிக்காவில் இருந்து விமானத்தை விட்டு இறக்கி அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து பால்கருக்கு ரயிலில் பயணித்தேன். சில சிறுவர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்திய கிரிக்கெட் வீரர் ரயிலில் பயணம் செய்வதை பார்த்து பலர் வியப்படைந்தனர் எனக் கூறினார்.