இந்திய கிரிக்கெட் அணியின் பதான் சகோதர்களான யூசப் பதான் - இர்பான் பதானின் பாச பிணைப்பு வீடியோ வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் சகோதரர்களாய் களமிறங்கி ரசிகர்களின் கவனத்தை பெற்றவர்கள் யூசப் பதான் - இர்பான் பதான். இவர்கள் இருவரும் ஒருவரின் மீது ஒருவர் மிகுந்த பாசம் உடையவர்கள் என்பதை பல தருணங்களில் நிரூபித்துள்ளனர். இந்நிலையில் ராஞ்சியில் இந்தூரின் ஹால்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் யூசப் பதான் இரண்டு இன்னிங்சிலும் தனது சதத்தை நிறைவு செய்தார்.
இதில் ஒரு இன்னிங்ஸில் யூசப் தனது சதத்தினை நிறைவு செய்யும்போது அவருடன் களத்தில் இருந்த இர்பான் பதான், மகிழ்ச்சியில் ஓடிச்சென்று அண்ணனை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை இர்பான் பதான் நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது.