கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடி.. களைகட்டும் ஏலம் !

கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடி.. களைகட்டும் ஏலம் !

கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடி.. களைகட்டும் ஏலம் !
Published on

ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸை ரூ.15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடஸ் அணி. அதேபோல நட்சத்திர ஆல் ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல்லை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி. கிளன் மேக்ஸ்வெல்லின் அடிப்படை விலையான ரூ.2 கோடி என்ற போதிலும் மேக்ஸ்வெல்லின் அதிரடிக்காக கிட்டத்தட்ட 5 மடங்கு விலை கொடுத்து வாங்கியுள்ளது பஞ்சாப் அணி.

கிரிக்கெட் போட்டியின் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. இப்போது வரை, ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி. இங்கிலாந்து அணியின் இயான் மார்கனை தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. மேலும், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கிறிஸ் லின்னை ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

மேலும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் ரூ1.50 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது டெல்லி கேபிடல்ஸ். இந்திய வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரை இதுவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இவர்களின் அடிப்படை ஏல தொகை ரூ50 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com