கடவுளின் அருளால் மீண்டும் அணியில் தேர்வாகியுள்ளேன்: பார்த்திவ் படேல்
கடவுளின் அருளால் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் தேர்வாகியுள்ளதாக பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதைத்தொடர்ந்து தென் ஆப்ரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முரளி விஜய், தவான், ராகுல், புஜாரா, ரஹானே, ரோஹித் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, பார்த்திவ் படேல், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தற்போது சாஹா உள்ளார். இவருக்கு ஏதேனும் காயம் அல்லது விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் மாற்று கீப்பர் வேண்டும் என்பதற்காக முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பார்த்திவ், ராஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததால், இந்திய அணிக்கு தேர்வாகிய தகவல் ஜெய்பூர் வந்தவுடன் தான் தெரியும் என்று கூறியுள்ளார். அத்துடன் கடவுளின் அருளால் தான் மீண்டும் அணியில் தேர்வாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.