PV.Sindhu
PV.Sindhupt desk

பாரிஸ் ஒலிம்பிக்: தேசிய கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசிய கொடியை சரத் கமலுடன் இணைந்து பிவி.சிந்து ஏந்தி செல்வார் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்திய அணியின் தலைவராக ககன் நரங் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க
Published on

33ஆவது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியின் தலைவராக குத்துச்சண்டைவீராங்கனை மேரி கோம் அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக அப்பதவியில் இருந்து விலகுவதாக மேரிகோம் அறிவித்தார்.

இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணியை வழிநடத்திச் செல்லும் தலைவராக துப்பாக்கிச் சுடுதல் வீரர் ககன் நரங் செயல்படுவார் என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா அறிவித்துள்ளார்.

இதே போன்று, ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியின்போது தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அவருடன், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவும் இணைந்து மூவர்ணக் கொடியை ஏந்திச் செல்வார் என பி.டி.உஷா அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com