டோக்கியோவில் நாளை தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள்

டோக்கியோவில் நாளை தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள்

டோக்கியோவில் நாளை தொடங்குகிறது பாராலிம்பிக் போட்டிகள்
Published on

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை முதல் மாற்றுத்திறனனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன.

இந்தப் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள்.

தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போல் பாராஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ஜப்பானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால் பாராலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com