பாராலிம்பிக் போட்டியில் 3 பிரிவுகளில் பங்கேற்கும் இளம் நாயகி பாலக் கோலி

பாராலிம்பிக் போட்டியில் 3 பிரிவுகளில் பங்கேற்கும் இளம் நாயகி பாலக் கோலி
பாராலிம்பிக் போட்டியில் 3 பிரிவுகளில் பங்கேற்கும் இளம் நாயகி பாலக் கோலி

டோக்யோவில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 19 வயதே ஆன பேட்மிண்டன் வீராங்கனை பாலக் கோலி மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் சிறப்பை பெறுகிறார்.

இதன் மூலம் பாராலிம்பிக் பேட்மிண்டனில் மூன்று பிரிவுகளில் பங்கேற்கும் இந்தியாவை சேர்ந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார். ஜலந்தரைச் சேர்ந்த இளம் நாயகி பாலக் கோலி மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய மூன்று பிரிவுகளில் பங்கேற்கவுள்ளார். ஏற்கனவே இந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற உலக பாரா பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார் பாலக் கோலி.

ஒலிம்பிக் பதக்கம் வென்று திரும்புமாறு அவருக்கு நாடு முழுவதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com