உலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி?

உலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி?

உலகக் கோப்பை போட்டியில் ரிஷாப், அப்ப தோனி?
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரிஷாப் பன்ட்டுக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத்தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷாப் பன்ட். அதிரடி ஆட்டக்காரரான இவர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தன்னை நிரூபித்தார். பின்னர், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடினார். 

இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடர் மற்றும் டெஸ்ட் போட்டியில் அவர் களமிறக்கப்பட்டார். இதில் சிறப்பாக விளையாடிய அவருக்கு இப்போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் ஒரு நாள் போட்டி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் விளையாடவில்லை. 

இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி தோல்வியை தழுவியது. இதில் அனுப வ வீரர் தோனி, 91 பந்துகளை சந்தித்து 51 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து அவரது ஆட்டம் சமூக வலைத்தளங்களில் கடுமை யாக விமர்சிக்கப்பட்டது.

டெஸ்ட் போட்டி போல ஒரு நாள் போட்டியில் ஆடியதால் தோற்க வேண்டியதாகிவிட்டது என்று முன்னாள் வீரர்கள் சிலர் கூறியிருந்தனர். அவரது ஃபார்ம் கேள்விக்குள்ளாகி இருக்கும் நிலையில், உலகக் கோப்பைக் கான வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பன்ட்டுக்கு இடம் இருக்கிறது என்று தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

‘’ஆஸ்திரேலிய தொடரில் ரிஷாப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு ஓய்வு அவசியம். இரண்டு வாரங்கள் கழித்து இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாட அழைக்க இருக்கிறோம். உலகக் கோப்பை போட்டிக்கான வீரர்களின் திட்டத்தில் அவரும் இருக்கிறார். அவர் சாம்பியன் வீரர். அவரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அவரே முழுமையாக அறியாமல் இருக்கிறார்.

அதே போல இளம் வீரர் சுப்மான் கில்-லும் சிறப்பாக ஆடி வருகிறார். ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டரில் அவர் களமிறங்கி நன்றாக ஆடுகிறார். நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக, இந்திய ஏ அணியில் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி ஆடியிருக்கிறார். ரோகித், தவானுக்கு மாற்று வீரராக கூட அவரை களமிறக்கலாம். ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் அவர் இடம் பெறுவாரா என்பதை இப்போது கூற முடியாது’’ என்றார்.


உலகக் கோப்பைக்கான வீரர்கள் திட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷாப் இருப்பதால், தோனியின் இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவர் அடுத் தடுத்த ஆட்டங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வெளிப்படுத்தினால் மட்டுமே அவருக் கான இடத்தை தக்க வைக்க முடியும் என்கிறார்கள், முன்னாள் வீரர்கள் சிலர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com