உலகக் கோப்பைப் போட்டியில் பன்ட், விஜய் சங்கர், ரஹானேவுக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பைப் போட்டியில் பன்ட், விஜய் சங்கர், ரஹானேவுக்கு வாய்ப்பு!

உலகக் கோப்பைப் போட்டியில் பன்ட், விஜய் சங்கர், ரஹானேவுக்கு வாய்ப்பு!
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் விஜய் சங்கர், ரிஷாப் பன்ட், ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பிருப்பதாகத் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித் துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30ஆம் தேதியில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்க இருக்கிறது. பல்வேறு நாட்டு அணிகளும் இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளன. இந்த வருட உலகக் கோப்பையை, இங்கிலாந்து, இந்திய அணிகள் வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியில் பரீட்சார்த்த முறையாக, பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறும்போது, ’’உலகக் கோப்பைப் போட்டிக்கான 15 பேர் கொண்ட உத்தேச அணியை தோராயமாக முடிவு செய்துள்ளோம். இருந்தாலும் இன்னும் வீரர்கள் அதில் இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஒரு வருடமாக, டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகளில் ரிஷாப் பன்ட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலில், அவர் கவனத்தில் இருக்கிறார். அவர் ஓர் ’அரோக்கியமான தலைவலி’. இதற்கு முன் அவரது ஆட்டத்தில் முதிர்ச்சி தேவையாக இருந்தது. அதற்காக, இந்திய ஏ அணியில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. 

ரஹானே, உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடியிருக்கிறார் (11 போட்டிகளில் 597 ரன். சராசரி 74.62). அதே போல விஜய் சங்கரும் கிடைக்கும் வாய்ப்புகளில் நன்றாக விளையாடி வருகிறார். இந்திய ஏ அணியின் மூலம் அவரும் திறமையை வளர்த்திருக்கிறார். இதனால் அவர்களும் கவனத்தில் இருக்கிறார்கள்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com