மகேந்திர சிங் தோனியைப் புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்

மகேந்திர சிங் தோனியைப் புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்

மகேந்திர சிங் தோனியைப் புகழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்
Published on

இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனிக்கு பாகிஸ்தான் வீரர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கிய தோனி, கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த 4ம் தேதி அறிவித்தார். இதையடுத்து, இந்திய அணியின் புதிய கேப்டனாக விராத் கோலி நியமிக்கப்பட்டார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனியின் சாதனைகளை கிரிக்கெட் உலகம் புகழ்ந்து வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஜாகிர் அப்பாஸ், சோயப் அக்தர் மற்றும் முன்னாள் டி20 கேப்டனான ஷாகித் அப்ரிடி ஆகியோர் தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

சோயிப் அக்தர்

தோனி மிகவும் பணிவுடனும், கண்ணியமுடனும் கேப்டன் பதவியை விட்டு விலகியிருக்கிறார். அவரது முடிவை நாம் மதிக்க வேண்டும்.

சாகித் அப்ரிடி

கிரிக்கெட் வீரர்களுக்கு தோனி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சாகித் அப்ரிடி கூறினார்.

ஜாகீர் அப்பாஸ்

தோனி மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி புதிய உயரங்களை தொட்டது இந்திய அணி கடந்த 2005-06 ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அன்றைய அதிபர் பர்வேஸ் முஷரஃப், தோனியின் சிகை அலங்காரத்தை புகழ்ந்தார். லாகூரில் நடந்த போட்டியில் தோனி குவித்த 72 ரன்களால் இந்திய அணி வெற்றிபெற்றது. அந்த போட்டியை நேரில் கண்டுகளித்த முஷரப், சிகை அலங்காரத்தை மட்டும் மாற்றி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com