பாகிஸ்தான்-இலங்கை முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான்-இலங்கை முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான்-இலங்கை முதல் டி20 போட்டி: பாகிஸ்தான் வெற்றி
Published on

இலங்கை அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, ஆரம்பம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. 18.3 ஓவர்களில் இலங்கை அணி 102 ரன்களில் ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி 3 விக்கெட்களையும், உஸ்மான் கான், முகமது ஹபீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 3 விக்கெட்களை மட்டும் இழந்த நிலையில் 18ஆவது ஓவரில் வெற்றி பெற்றது. சோயிப் மாலிக் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com