விளையாட்டு
பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடக்கும்: பாக். கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தானில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடக்கும்: பாக். கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தானில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது தொடர்பாக, சாதகமான அறிக்கையை ஐசிசி பாதுகாப்புக் குழு அளிக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அமைத்த பாதுகாப்பு குழுவினர், இம்மாத இறுதியில் லாகூரில் பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஐசிசி குழுவினர் திருப்தி அடைவார்கள் என நம்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேதி தெரிவித்துள்ளார்.
உலக லெவன் அணி, அடுத்த மாதம் லாகூர் சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட் அணியும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு குழு அளிக்கும் அறிக்கையைப் பொருத்தே, இந்த போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி கொடுக்க உள்ளது.