உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து vs பாகிஸ்தான்

உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து vs பாகிஸ்தான்
உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து vs பாகிஸ்தான்

இன்று நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த போட்டியில், தென் ஆப்பிரிக்கா- பங்களாதேஷ் அணிகள் மோதின.  இதில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் இந்தத் தொடரின் ஆறாவது போட்டி நாட்டிங்ஹாம் நகரில், இந்திய நேரப்படி இன்று மதியம் 3 மணிக்குத் தொடங்குகிறது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணியை எதிர்த்து பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது. 

இந்தச் சூழலில் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை தோற்கடித்த இங்கிலாந்து அணி, வெற்றியைத் தொடரும் வேட்கையுடன் களமிறங்குகிறது. முந்தைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. 

எனவே இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 1974-ஆம் ஆண்டு தொடங்கி இவ்விரு அணிகளும் இதுவரை 87 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணியின் ஆதிக்கமே அதிகம் இருந்திருக்கிறது. 53 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணி 31  போட்டிகளில் வென்றிருக்கிறது. 3 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் கைவிடப்பட்டிருக்கின்றன என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com