விளையாட்டு
டாஸ் வென்றது பாகிஸ்தான் : தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு
டாஸ் வென்றது பாகிஸ்தான் : தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்றது.
உலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று 9வது இடத்தில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வென்று பட்டியலில் முன்னேற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது.
இதேபோன்று தென்னாப்பிரிக்க அணியும் 6 போட்டிகளில் ஒன்றை மட்டும் வென்று 8வது இடத்தில் இருப்பதால், அவர்களும் போட்டியை வென்று முன்னேற்றம் அடையும் தீவிரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியின் ஹசன் அலிக்கு பதிலாக ஷாஹின் அஃப்ரிதி சேர்க்கப்பட்டுள்ளார்.