மழையால் இலங்கை - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி ரத்து

மழையால் இலங்கை - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி ரத்து

மழையால் இலங்கை - பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி ரத்து
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரிஸ்டல் மைதானத்தில் 11வது லீக் போட்டி இலங்கை - பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்தது. ஆனால், தொடக்கம் முதலே மழை பெய்தது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மழை தொடர்ச்சியாக பெய்தது. 

அதனால், இலங்கை - பாகிஸ்தான் இடையிலான போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் ரத்து செய்யப்பட்டுள்ள முதல் போட்டி இதுதான். நீண்ட நேரம் காத்திருந்த இரு அணிகளின் ரசிகர்கள், போட்டி ரத்தானதால் ஏமாற்றம் அடைந்தனர்.

போட்டி கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி அடைந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com