இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர, பாக். கிரிக்கெட் வாரியம் முடிவு

இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர, பாக். கிரிக்கெட் வாரியம் முடிவு
இந்தியாவுக்கு எதிராக வழக்கு தொடர, பாக். கிரிக்கெட் வாரியம் முடிவு

கிரிக்கெட் தொடர்களில் விளையாட மறுப்பதாகக் கூறி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது சர்வதேச கிரிக்கெட் சங்கத்தில் வழக்குத் தொடர, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் படி, இரு நாடுகளும் 6 ஆண்டுகளில் (2015-2023) 8 தொடர்கள் விளையாட வேண்டும். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லை பிரச்சனை காரணமாகவும் இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறியதாகவும் அதனால் தங்களுக்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தில் வழக்குத் தொடர உள்ளதாகக் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com