விளையாட்டு
தாலிபான்கள் நல்லெண்ணத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்: அஃப்ரிடி சர்ச்சை கருத்து
தாலிபான்கள் நல்லெண்ணத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்: அஃப்ரிடி சர்ச்சை கருத்து
ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள தாலிபான்களின் ஆட்சியை வரவேற்றுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி.
ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் ஆளுகைக்குள் வந்திருக்கிறது. இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தாலிபான்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதன் நட்பு நாடான பாகிஸ்தான், தாலிபான்களின் ஆட்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வரவேற்றுப் பேசியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை நல்லெண்ணத்துடன் கைப்பற்றி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஷாஹித் அஃப்ரிடி அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், ''தாலிபான்கள் மிகவும் நேர்மறையான மனதுடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள். தாலிபான்கள் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.