\
உலகக் கோப்பை ஹாக்கிக்கு பாகிஸ்தான் தகுதி

உலகக் கோப்பை ஹாக்கிக்கு பாகிஸ்தான் தகுதி

உலகக் கோப்பை ஹாக்கிக்கு பாகிஸ்தான் தகுதி
Published on: 

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

லண்டனில் நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் தொடரில் பாகிஸ்தான் அணி ஏழாவது இடம் பிடித்திருந்தது. இந்த நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கான தகுதியை ஏற்கனவே உறுதி செய்திருந்த ஜெர்மனி, இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள், ஐரோப்பிய சாம்பியன்ஷிப் ஹாக்கியில் அரையிறுதிக்கு முன்னேறின.

இதனால், உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு 13 ஆவது அணியாக, பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது. உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அடுத்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 1‌6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. போட்டியை நடத்தும் அணி என்பதால் இந்தியா நேரடியாக உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com