தனது மகன்களுடன் நேரம் செலவழித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கான இறுதிபோட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி, விராட் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அசார் அலியின் மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அசார் அலி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது மகன்களுடன் நேரத்தை செலவழித்த இந்த ஜாம்பவான்களுக்கு நன்றி என்றும், இதனால் தனது குழந்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபிராஸின் மகனை டோனி கையில் தூக்கி வைத்துக் கொஞ்சும் புகைப்படம் வைரலானது.