தென் ஆப்ரிக்க அணியிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான் : விவாதமான பாக்கர் ஜாமன் ரன் அவுட்!

தென் ஆப்ரிக்க அணியிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான் : விவாதமான பாக்கர் ஜாமன் ரன் அவுட்!
தென் ஆப்ரிக்க அணியிடம் போராடி வீழ்ந்தது பாகிஸ்தான் : விவாதமான பாக்கர் ஜாமன் ரன் அவுட்!

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இறுதி வரை வெற்றிக்காக போராடி வீழ்ந்தது பாகிஸ்தான்.

50 ஓவர்களில் 324 ரன்களை 9 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி குவிந்திருந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பாக்கர் ஜாமன் 155 பந்துகளில் 193 ரன்களை குவித்திருந்தார். அதன் மூலம் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் அவர். 

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 185 (நாட் அவுட்), தோனி 183 (நாட் அவுட்), கோலி 183 ரன்களை இரண்டாவதாக பேட் செய்த போது ரன்களை குவித்துள்ளனர். இருப்பினும் பாக்கரின் போராட்டம் வீணானது. கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்ட்ரைக்கில் பாக்கர் தான் இருந்தார். அந்த ஓவரில் முதல் பந்தை லாங் ஆப் திசைக்கு விரட்டி இரண்டு ரன்கள் எடுக்க முயன்றார். அப்போது பந்தை பீல்டர் மார்க்ரம் ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு அடித்த அபாரமான த்ரோவினால் ரன் அவுட் ஆனார். அப்போது தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் டி காக் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் பந்தை பிடிக்குமாறு பவுலருக்கு சொன்னது போல இருந்தது. அதனால் வட்டத்தில் தனது வேகத்தை குறைத்த பாக்கர் பின்பக்கமாக திரும்பி பார்த்தார். ஆனால் பந்து ஸ்ட்ரைக்கர் எண்டில் த்ரோ செய்யபபட்டதை பின்னர் தான் அறிந்தார். டி காக்கின் இந்த யுக்தி தான் தற்போது விவதாமகியுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் ‘இது கேம் ஸ்பிரிட்டை குலைக்கும் செயல்’ என சொல்லி ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்துகிறார். 

இதே போல பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். "அதில் டி காக்கை குறியாய் சொல்ல ஒன்றும் இல்லை. அது எனது தவறு" என சொல்லி உள்ளார் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற பாக்கர் ஜாமன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com