பாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா

பாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா
பாகிஸ்தானுக்கு டிராவிட் மாதிரி ஒருவர் வேண்டும்: ரமீஸ் ராஜா

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் அரையிறுதியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அபார சதமடித்தார்.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறும்போது, ‘இந்தியா சிறப்பான வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்கான பெருமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையே சேரும். திறமையான வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிறப்பாக பயிற்சியளித்திருக்கிறார். அவரிடம் வீரர்கள், பல விஷயங்களை கற்றுத் தெரிந்திருக்கிறார்கள். அதை மைதானத்தில் பார்க்க முடிந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வீரர்களை அப்படி பார்க்க முடியவில்லை. ஜூனியர் கிரிக்கெட் சிஸ்டத்தை மொத்தமாக மாற்றியமைக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்கள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாகிஸ்தானுக்கும் திராவிட் போல் ஒரு பயிற்சியாளர் தேவை’ என்றார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com