தோனி மகாபாரத போருக்கு செல்லவில்லை: கையுறை விவகாரத்தில் பாக். அமைச்சர்
கிரிக்கெட் விளையாட தான் தோனி இங்கிலாந்து நாட்டிற்கு சென்றிருக்கிறாரே தவிர மகாபாரத போருக்கு அல்ல என பாகிஸ்தான் அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா- தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டி, சவுதாம்ப்டன் நகரில் நேற்றுமுன் தினம் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனி, பாரா மிலிட்டரியின் பலிடான் முத்திரை பதித்த கையுறைகளை (GLOVES) விக்கெட் கீப்பர் தோனி அணிந்திருந்தார். இந்த முத்திரையின் அர்த்தம் ‘தியாகம்’ ஆகும்.
கடந்த 2011ஆம் ஆண்டு தோனிக்கு, ராணுவத்தில் கவுரவ லெப்டினென்ட் பதவி வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு தோனி, பாராமிலிட்டரி பிரிவில் சிறிய பயிற்சியும் மேற்கொண்டார்.
இந்நிலையில், தனது கையுறையில் பாலிடன் முத்திரையை தோனி பதித்திருந்தற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் கிடைத்தன. சில மீடியா இதுபற்றி விவாதங்களையும் நடத்தின.
இதற்கிடையே, தோனி தன் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. ஐசிசி விதிகளின் படி சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களின் ஆடைகளில் மதம், அரசியல் உள்ளிட்டவை தொடர்பான எந்தப் பிரசாரமும் இருக்க அனுமதி கிடையாது. இந்த விதியின் அடிப்படையிலேயே பிசிசிஐ மூலமாக தோனிக்கு ஐசிசி வலியுறுத்தியுள்ளது.
தோனி இந்த செயல் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஃபவட் சௌத்திரி, ’’தோனி இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விளையாடத்தான் சென்றுள்ளார். மகாபாரத போருக்கு அல்ல. தேவையில்லாத விவாதங்களை சில இந்திய மீடியா செய்துவருகிறது’’ என குற்றஞ்சாட்டியுள்ளார். இ