“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்

“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்
 “பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் குழுப்பத்திலிருந்தார் என்று இந்தியாவின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்தியா அணி, பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் 7வது முறையாக பாகிஸ்தான் அணியை இந்திய அணி தோற்கடித்தது. இந்தத் தோல்வியைடுத்து பாகிஸ்தான் கேப்டன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார். அத்துடன் அவர் இந்திய அணிக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் வகுக்கவில்லை. உதாரணமாக வாகாப் ரியாஸ் பந்துவீசும் போது சர்ஃபராஸ் ஷார்ட் மிட் விக்கெட் வைத்திருந்தார். 

மேலும் ஷாடாப் கான் பந்துவீசும் போது ஸ்லிப் வைத்திருந்தார். இந்த ஆடுகளத்தில் லெக் ஸ்பின்னர் பந்துவீசுவது கடினம். அதுவும் அவர் சரியான இடங்களில் பந்துவீசாதது மேலும் கடினமானது. இது போன்ற முக்கியமான போட்டிகளில் இந்த மாதிரியான அனுகுமுறை மிகவும் தவறானது. 

மேலும் பந்து சரியாக ஸ்விங்காத நிலையில் ஓவர் தி விக்கெட் திசையிலிருந்து பந்துவீசியது தவறு. வாகாப் ரியஸ் இந்தத் தவறை நிறையே நேரம் செய்தார். ஹசன் அலி ஒருவர்தான் நன்றாக பந்துவீசினார். நானாக இருந்தால் ஹசன் அலியை வேற மாதிரி பந்துவீச சொல்லியிருப்பேன். ஆனால் பாகிஸ்தான் அதை செய்யவில்லை”எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com