கிரிக்கெட் உலகில் பேசு பொருளான ஃபாக்கர் ஜானின் ரன் அவுட் குறித்து டேனிஷ் கனேரியா கருத்து

கிரிக்கெட் உலகில் பேசு பொருளான ஃபாக்கர் ஜானின் ரன் அவுட் குறித்து டேனிஷ் கனேரியா கருத்து
கிரிக்கெட் உலகில் பேசு பொருளான ஃபாக்கர் ஜானின் ரன் அவுட் குறித்து டேனிஷ் கனேரியா கருத்து

“ஃபாக்கர் ஜாமனின் ரன் அவுட் சர்ச்சையில் டி காக்கின் தவறு ஏதும் இல்லை என ஐசிசி விதிகள் சொல்கிறது!” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஃபாக்கர் ஜாமனை தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் ரன் அவுட் செய்த விதம் சர்ச்சையக வெடித்துள்ளது. இந்நிலையின், இந்த ரன் அவுட் சர்ச்சையில் டி காக்கின் தவறு ஏதும் இல்லை என ஐசிசி விதிகள் சொல்கிறது என தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா . 

அதனை அவரது யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார். 

“155 பந்துகளில் 193 ரன்களை எடுத்த ஃபாக்கர் ஜாமனால் பாகிஸ்தான் அணியை வெற்றி கோட்டுக்கு அருகே கொண்டு சென்று வீழ செய்தது அந்த ரன் அவுட் தான். அதில் டி காக்கின் தவறு ஏதும் இல்லை என ஐசிசி விதிகள் சொல்கிறது. என்னை பொறுத்த வரை அவர் தெரு கிரிக்கெட்டில் விளையாடும் ஸ்மார்ட்டான சாமர்த்தியத்தை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செய்து விட்டார்” என அவர் சொல்லியுள்ளார். 

டி காக், பாக்கர் ஜாமனை ரன் அவுட் செய்ய அவரது கவனத்தை திசை திருப்பி அவுட் செய்திருந்தார். இருப்பினும் இதில் அவரது தவறு ஏதும் இல்லை, கவனக்குறைவாக நான் செயல்பட்டது தான் தவறு என பெருந்தன்மையுடன் சொல்லியுள்ளார் விக்கெட்டை இழந்த பாக்கர் ஜாமன். இது சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாக்காகி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com