இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி 20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான்– இலங்கை அணிகள் இடையிலான முதல் இரு டி20 போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்தது. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டி பாகிஸ்தானின் லாகூரில் நேற்று நடந்தது. பாதுகாப்பு பயம் காரணமாக இலங்கை முன்னணி வீரர்கள் விலகியதால், திசரா பெரேரா தலைமையில் இரண்டாம் நிலை இலங்கை அணி இந்த போட்டியில் பங்கேற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோயிப் மாலிக், 24 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார். பின்னர் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.
ஒருநாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து, 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.