\
பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் ஜாம்பவான் 'பூம் பூம்' அஃப்ரிடி விலகல்

பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் ஜாம்பவான் 'பூம் பூம்' அஃப்ரிடி விலகல்

பிஎஸ்எல் டி20 கிரிக்கெட்: பாகிஸ்தான் ஜாம்பவான் 'பூம் பூம்' அஃப்ரிடி விலகல்
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷகித் அஃப்ரிடி, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வலியினால் விலகுவதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர். 

“சுமார் 15 - 16 ஆண்டுகளாகள் இந்த முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வருகிறேன். இப்போது அந்த காயம் எனக்கு அதிக வலியை கொடுக்கிறது. அதனால் வேறு வழி இல்லாமல் விலக வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. காயத்திலிருந்து மீண்டதும் ரசிகர்களுக்காக மீண்டும் களத்திற்கு திரும்புவேன்” என தெரிவித்துள்ளார் அவர். 

சுமார் 7 ஆண்டு காலம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் அஃப்ரிடி விளையாடி வந்தார். தற்போது Quetta Gladiators அணிக்காக அவர் விளையாடி வந்தார். ஆல்-ரவுண்டரான அவர் 459 ரன்களும், 47 விக்கெட்டுகளையும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கைப்பற்றியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com