பிசிசிஐ-க்கு ரூ. 11 கோடி இழப்பீடு வழங்கிய பாக்.கிரிக்கெட் வாரியம்!
இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரூ.11 கோடியை இழப்பீடாக வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்வதால், அந்த நாட்டுடன் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நிறுத்தியது.
இதனால், ’இந்திய கிரிக்கெட் வாரியம், தங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தொடரில் பங்கேற்காததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நஷ்ட ஈடாக, தங்களுக்கு ரூ.481 கோடியை பிசிசிஐ வழங்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின், தீர்ப்பாய கமிட்டியில் வழக்கு தொடர்ந்தது.
இதை விசாரித்த அந்த கமிட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஏற்பட்ட வழக்கு உள்ளிட்ட செலவுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
அதன்படி வழங்க வேண்டிய இழப்பீடு தொகை, 1.6 மில்லியன் டாலரை (ரூ.11 கோடி) இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வழங்கி விட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மணி நேற்று தெரிவித்தார்.