\
பவுலிங்கில் உலக அளவில் நாங்கதான் பெஸ்ட்: பாக். கேப்டன்

பவுலிங்கில் உலக அளவில் நாங்கதான் பெஸ்ட்: பாக். கேப்டன்

பவுலிங்கில் உலக அளவில் நாங்கதான் பெஸ்ட்: பாக். கேப்டன்
Published on: 

பந்துவீச்சில் எங்கள் அணி, மற்ற அணிகளை விட சிறப்பானதாக இருக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து எங்கள் அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ஹசன் அலி பிரமாதமாக பந்துவீசுகிறார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் தன்னை மேலும் மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார். அதனால்தான் அவர், இப்போது பந்துவீச்சில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். 2017-ல் அதிக விக்கெட் எடுத்தவர் இவர்தான். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மொத்தம் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இப்போது இலங்கைக்கு எதிரான போட்டியில் 12 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். அவருடன் உஸ்மான் கான், ரும்மான் ரயீஸ், சதாப், ஜுனைத் கான் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். இன்றைய நிலையில் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி உலக அளவில் சிறப்பானதாக இருக்கிறது’ என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com