ஆன்லைனில் விற்பனைக்கு வந்த வேகப்பந்து வீச்சாளர்
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வாஹாப் ரியாஸ், பிரபல வணிக இணையதளமான இ-பேயில் விற்பனைக்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரத்தில், வஹாப் ரியாஸுக்கு விலையாக 610 ஆஸ்திரேலிய டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எதிர்பார்க்கப்படும் டெலிவரி டேட் என்ற இடத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 6 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு விளையாடிவரும் நிலையில், அந்நாட்டு ரசிகர்களிடையே இந்த விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான எட்ஜ்பாஸ்டனில் நடந்த போட்டியின் போது காயம் ஏற்பட்டதால், வஹாப் ரியாஸ் தொடரிலிருந்தே வெளியேறினார். 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற அந்த போட்டியில் 8.4 ஓவர்கள் வீசிய வஹாப் ரியாஸ் 84 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.