பாக். கிரிக்கெட் அணியை கவுரவப்படுத்த தபால் தலை!

பாக். கிரிக்கெட் அணியை கவுரவப்படுத்த தபால் தலை!

பாக். கிரிக்கெட் அணியை கவுரவப்படுத்த தபால் தலை!
Published on

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கவுரவப்படுத்தும் விதமாக, அந்நாட்டு அஞ்சல்துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன் மாதம் லண்டனில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதிய சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெற்றிபெற்று சாம்பியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றியை கவுரவப்படுத்தும் விதமாக, பாகிஸ்தான் அஞ்சல் துறை சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. ரூ.5 மற்றும் ரூ.10 ரூபாய் மதிப்பிலான இந்த தபால் தலையில், சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் கோப்பையுடன் வீரர்கள் நிற்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com